தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா “இந்துத்துவா தலைவர்”..!! தமிழிசை சௌந்தர்ராஜன் பரபரப்பு பேச்சு..!!

தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் தெரிவித்திருப்பது “ஜெயலலிதா இந்து மதம் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவ தலைவர் என்பதை யாராலும் மறுக்க இயலாது, கர சேவையை காரணமாக தெரிவித்து பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அது தவறு என துணிச்சலாக ஜெயலலிதா கண்டித்தார். ராமர் கோவில் தேவை என தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியவர் ஜெயலலிதா. கோயில்களில் அன்னதானம் போட்டவர்.

ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து தனது கனவுகள்  நிறைவேற்றிவிட்டது என பேசி இருப்பார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நல்ல நேரம் பார்த்து தான் செய்வார். ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல நாங்கள் நினைக்கின்றோம் அவரை அதிமுகவினர் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்”,என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் அதே கருத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.

Read Previous

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது..!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!!

Read Next

இளைஞர்களின் எதிர்காலம் இனி இதுதான்..!! ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular