தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது..
உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் அன்று நடைபெறும் அதனைத் தொடர்ந்து மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம், மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2 தேதி காந்தி பிறந்த தினம், நவம்பர் 1ஆம் உள்ளாட்சி தினம் ஆகிய 6 நாட்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வந்ததால் அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது எனவே அன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு அந்தக் கூட்டம் 23ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, அதன்படி தமிழக முழுவதும் நாளை சனிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது காலை 11 மணிக்கு அந்தந்த கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த கூட்டம் நடக்கிறது நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் வடகிழக்கு பருவங்களை நடவடிக்கைகளை குறித்து விவாதிக்கப்பட உள்ளது மேலும் இது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..!!




