தமிழர்களின் திருமண திருவிழா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழும் வாழ்க்கையே ஆகும். இவ்வுலகில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சந்தோசத்திற்காக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். அத்தகைய வாழ்க்கையானது இன்பமாக அமைய வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம் ஆகும்.

முந்தைய காலகட்டத்தில் சடங்குகள் ஏதும் இன்றி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அன்றைய காலகட்டத்தில் கணவனும் மனைவியும் எந்த ஒரு ஆதாரமும் இன்றி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்ததால் சிலர் தான் திருமணமே செய்யவில்லை என்று ஏமாற்றி வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் முனிவர் ஒருவரால் சடங்கு கொண்டுவரப்பட்டு திருமணம் என்பது இரு வீட்டார் சேர்ந்து கொடி திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

இதில் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஓன்று கூடி இவர்கள்தான் கணவன் மனைவி என்று விளங்கும் வகையில் சடங்கு அமைந்துள்ளது. திருமணத்தில் தாலி கட்டுவது கரணம் எனப்படும். திருமணம் ஊரறிய இறைவன் முன் ஆசி பெற்று தாங்கள்தான் கணவன் மனைவி என்று எல்லோர் முன்னும் உறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

திருமணம் மூன்று வகையில் நிச்சயிக்கப்படுகிறது.
1. கொடை மணம்
2. காதல் மணம்
3. கவர்வு மணம்

கொடை மணம்:-

கொடை மணம் என்பது தன் மகளை ஏழை மணவாளனுக்கு எல்லா உதவிகளும் செய்து திருமணம் நடத்தி வைப்பது. மணவாளன் குடும்பத்தில் இருந்து செல்வம் பொருள் ஏதோ ஒன்று கொடுத்து தன் மகளை திருமணம் செய்து வைப்பது

காதல் மணம்:-

ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோருக்கு தெரியாமலும் மற்றவர்களிடம் கூறாமலும் ஒருவரை ஒருவர் கூடி வாழ்வது.

கவர்வு மணம்:-

கவரும் அறம் என்பது பெற்றோரின் விருப்பமின்றி பெண்ணின் விருப்பமின்றியே கட்டாயப்படுத்தி கவர்ந்து சென்று அப்பெண்ணை திருமணம் செல்வது.

திருமணங்கள் இரண்டு முறைப்படி செய்யப்படுகிறது. அவை,
1.அகமணம்
2.புறமணம்

அகமணம்:-
அகமணம் என்பது தன் சாதியை சார்ந்தவர் திருமணம் செய்து கொள்வது.

புற மணம்:-
புறமணம் என்பது தன் சாதியை சேர்ந்தவர் அல்லாமல் அடுத்த சாதியில் பிறந்தவரை திருமணம் செய்து கொள்வது.

திருமணம் நிர்ணயிக்கும் வயது முறை:-

முந்தைய காலத்தில் மணமகனுக்கு 18 வயதும், மணமகளுக்கு 12 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மணமகனின் வயது 21 மணமகளின் வயது 18 நிரம்பியவுடன் திருமணம் செய்து வைக்கின்றனர்.

திருமணத்திற்கு மணம் பார்க்கும் முறை:-

தனது மகனுக்கும் அல்லது மகளுக்கும் திருமணம் செய்து வைக்க சொந்தத்தில் முறையாக உள்ளவரை தேடுவர் தூரத்து சொந்தம் என்ற முறையில் திருமணம் செய்து வைக்க மணமகன் அல்லது மணமகளை தேடுவர். இவ்வாறு அமைந்த உடன் திருமணம் பேச்சு நடைபெறும், இத்திருமணம் பேச்சை உற்றார் உறவினரை கூட்டி மணமக்களின் பொருத்தங்களை ஜோதிட முறைப்படி பார்ப்பர்.

அதாவது 10 பொருத்தங்கள் இருவருக்கும் எந்த வகையில் பொருத்தம் உள்ளது என்பதை பார்த்து திருமணத்தை நடத்தி வைப்பார்.

1. நாள் (நட்சத்திரம்)
2. கணம்
3. எண்ணிக்கை (மகேந்திரம்)
4. பெண் நிகழ்ச்சி (ஸ்திரீ தீர்க்கம்)
5. பிறவி
6.ஒரை (ராசி)
7. கோள் (இராசியதிபதி)
8. வசியம்
9. இணக்கம் (வேதை)
10. சரடு (இரச்சு)

பொருத்தங்கள் பார்த்து பொருந்தியவுடன் மணமகளின் வீட்டாரும், மணமகனின் வீட்டாரும் சேர்ந்து நிச்சயம் செய்வார்கள்.

நிச்சயார்த்தம்:-

நிச்சயார்த்தம் என்பது மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உரிமையானவர் என்பதை நிர்ணயிக்கும் ஒரு நிகழ்வு ஆகும். மணமகள் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் ஒன்று சேர்ந்து தங்களது சொந்தங்களை அழைத்து வெற்றிலை பாக்கு மாற்றி நிச்சயம் செய்து வைப்பர்.

நிச்சயார்த்தம் முடிந்தவுடன் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்வர்.

1.முகூர்த்தக்கால் ஊண்ருதல்
இந்த நிகழ்ச்சியில் பூ மாலை, வாழைப்பழம், பாக்கு வைத்து அவரவர் தெய்வங்களை வழிபட்டு மரத்திற்கு சந்தனம் குங்குமம் பூசுவர்.

2.திருமண பத்திரிக்கை அடித்தல்
திருமண பத்திரிக்கையில் நல்ல நேரம், நல்ல நாள் குறித்து இருவீட்டாரும் வரவேற்கும் வகையில் பத்திரிகை கொடுத்து வரவேற்ப்பார்கள்.

3.பெண் அழைப்பு நிகழ்ச்சி
திருமணத்திற்க்கு முந்தைய நாளில் மணமகனின் வீட்டார் மணமகளை அவளுடைய வீட்டிற்க்கு சென்று உற்றார் உறவினர் சூழ அழைத்து வருவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மணமகள் வீட்டார் சிறப்பான விருந்து கொடுத்து மணமகளை அனுப்பி வைப்பார்கள்.

மணவிழா:-

மணவிழா நாளில் மேடை அலங்கரித்து மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவான். இந்த நிகழ்ச்சியில் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மணமகளையும் மணமகனையும் வாழ்த்துவார்கள் . பரிசுகள் வழங்கியும், இனிப்புகள் கொடுத்ததும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அன்றைய நாளில் மணமகனின் வீட்டார் சார்பில் விருந்து கொடுத்து நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள்.🙏🏻🙏🏻

Read Previous

இரவில் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

பெரும் சோகம்.. கொள்ளிடம் ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular