தமிழிசை சவுந்தராஜனுக்கு பாஜக தலைவர் பகிரங்க கண்டனம்..!! மேடையிலேயே நடந்த சம்பவம்.!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்ற பின் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

கோவை மக்கவை தேர்தல்  தோல்வி குறித்து எஸ்.பி வேலுச்சாமி அளித்த பேட்டி ஒன்றில் அண்ணாமலை அளித்த பதிலில் தமிழிசை- அண்ணாமலைக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே அண்ணாமலையும் இனி தான் கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களை சந்திப்பேன். வேறெங்கும் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பதவி ஏற்பு விழா கன்னாவரம் நகரில் நடைபெற்ற முடிந்தது. இந்த நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  அங்கு முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார் .அவர் அமித்ஷா மற்றும் வெங்கையா நாயுடுவிற்கு வணக்கம் செலுத்தினால். அச்சமயம் தமிழிசை சௌந்தர்ராஜன் அழைத்த அமித்ஷா கோபமடைந்த முகத்துடன் கடுமையாக ஏதோ கண்டனம் தெரிவித்தார்.

இதை கேட்ட தமிழிசை சௌந்தரராஜன் அவரிடம் சாரி கேட்டவாறு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக அண்ணாமலை -தமிழிசை விவகாரம் குறித்து அமித்ஷா பேசி கண்டித்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அமித்ஷா எதற்காக தமிழிசை சௌந்தரராஜன் கண்டித்தார் என்பது தமிழிசை சௌந்தரராஜன் மௌனம் கலைத்தால் மட்டுமே தெரிய வரும்.

https://x.com/MeghUpdates/status/1800779839596863853?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1800779839596863853%7Ctwgr%5Efefd2ffa4a7d0caa9772a2233675d2ec559ab822%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Famit-shah-highly-condemn-to-tamilisai

Read Previous

“இனிமேல் தொப்பைக்கு சொல்லுங்க குட் பை”! தட்டையான வயிறு பெற இந்த 4 டிடாக்ஸ் ட்ரிங்க் போதும்.!!

Read Next

மாண்டுபோன மனிதம்? அவசரமாக சென்ற ஆம்புலன்ஸை மறித்து ஓட்டுனரை தாக்கிய குடிகார இளைஞன்..!! ஓவர்டேக் செய்து வந்ததால் அதிர்ச்சி செயல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular