![](https://tamilyugam.in/wp-content/uploads/2025/01/tamil-yugam-news-online-breaking-viral-news-channel-9.webp)
தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2025 அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகை போனஸ் 2025:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டப்பட உள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பின் மூலம் சி, டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த வகையில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
அந்த வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் சி, டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.