
திருச்சியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலங்களாக அதிகம் மாற்றப்பட்டுள்ளது.
48% விவசாய நிலம் தமிழகத்தில் இருந்தது. ஆனால் இது தற்போது 38 சதவீதமாக மாறி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் எந்த திட்டமும் நீர் பாசன திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யவில்லாதது தான்.
காலமாற்றம் பருவநிலை மாற்றம் மத்தியில் எதிர்காலத்தில் நாம் பெரிய நெருக்கடியில் உள்ளோம்.மேகதாது விவகாரத்தில கர்நாடக சட்டப்பேரவையில் அணைக்கட்ட போகிறோம் என்று கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இரண்டு மாநில நல்லுறவை கெடுக்கும் வகையில் கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் தூண்டி வருகின்றனர். இது சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும்.
நீர் பங்கேட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ளார் முத்துச்சாமி. அவர் வந்தது பரவாயில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் பயமாக தான் உள்ளது. மது விற்பனைத் துறை என்று எண்ணிக்கொண்டு வருகின்றனர்.
திருமணத்தில் மது விற்பனை சந்துக்கடை விற்பனை என மது விற்பனை துறையாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. மது விற்பனை கடந்த ஆண்டு 36,000 கோடி இந்த ஆண்டோ 45 ஆயிரம் கோடி.
மூட மனம் இல்லாமல் அரசு 500 கடைகளை மூடி உள்ளது. தமிழகத்தில் சந்து கடையுடன் சேர்ந்து 25 ஆயிரம் கடைகள் உள்ளன.
தமிழகத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது. கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி நன்றாக தெரியும். கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள்? எப்படி வருகிறது? என எல்லாம் தெரியும். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த தலைமுறை அழிந்து கொண்டுள்ளது. தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.