• September 11, 2024

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்..!! பரிசுத்தொகை அறிவிப்பு..!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் (நத்தம்) ,சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதும். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 50 லட்சமும், 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 30 லட்சமும், 3-வது மற்றும் 4-வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

உங்களுக்கு தான்.. தினமும் பிஸ்கட் சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு..!!

Read Next

தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular