தமிழ்நாடு முதலிடம்..!! அதிக தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு..!! மத்திய அரசு தகவல்..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சியால், தமிழ்நாட்டின் பல பகுதிகள் தொழில் நகரங்களாக மாறி வரும் நிலையில், தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின் படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாகவும் மற்றும் அதிக பேருக்கு தொழில் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஒட்டு மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, தமிழகத்தில் 15.66% உள்ளதாகவும் மற்றும் 1.85% தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.