தமிழ்நாட்டிடம் உதவி கோரும் தெலங்கானா..!!

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஓஎஸ்ஆர் தெலங்கானா கட்சி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. 3வது முறையும் ஆட்சியைப் பிடிக்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவலர்களை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசுக்கு தெலங்கானா தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழ்நாடு அரசு பரிசீலித்து முக்கிய முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கத்ரினா கைஃப்பின் Deepfake புகைப்படம்..!!

Read Next

ஆதார் கார்டு & ரேஷன் கார்டு எளிமையாக அப்டேட் செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular