வாக்கிங் நிமோனியா என்பது தீவிரத் தன்மை குறைந்த நிமோனியா ஆகும் சளி இரும்பல் தொண்டை வலி, காய்ச்சல் உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும் பொதுவாக வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது…
ஆனால் தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வாக்கிங் நிம்முனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் பரந்தே போதுமானதாக இருந்தது ஆனால் இப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பெரிய அளவில் தருவதில்லை என்றும் இதனால் நோயின் தீவிரம் அதிகரித்து ஐ சி யு வார்டில் சேர்க்கும் சூழல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிர்காலம் காரணமாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது இதனிடையே வாக்கிங் நிம்மோனியாவும் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஐந்து வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிம்மோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகின்றனர்..!!