
பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது..
வடகிழக்கு பருவமழை காலத்தில் அடிக்கடி பரவும் நோய்கள் குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது, இந்த காலகட்டத்தில் டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டியளித்தார் அவர் இது குறித்து பேசுகையில் பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான் தமிழ்நாட்டில் எட்டு பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர், அடுத்தடுத்து ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்பு பூஜ்யம் நிலையை அடையும் என்றார், மேலும் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என்ற அளவில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு உள்ளது, மருத்துவமனைகளில் 100% காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார். தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில் பருவ மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்படுத்தும் விதத்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையினர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்தியும் மேற்கொண்டு வருகின்றனர், மேலும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் மாவட்ட சுகாதார அதிகாரியுடன் வாராந்திர ஆய்வுகளை நடத்தி டெங்கு பாதிப்பு தடுப்பதை பற்றிய முன்னேற்றத்தை கண்காணிக்கவும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் செய்கிறார்கள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் தீவிர முயற்சியால் டெங்கு காய்ச்சலால் இறப்பு விகிதம் கணிசமான முறையில் குறைந்துள்ளது மேலும் மாநிலம் முழுவதும் பரவும் தொற்று நோய்கள் பரவாமல் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்..!!