தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழ்நாட்டில் பகல் ஒரு மணிக்குள் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது..

கடலூர் அரியலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் தஞ்சை பெரம்பலூர் ராமநாதபுரம் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது, மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அப்பப்போது மழை பெய்து வருகிறது, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது இந்த மழை காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விவரம் குறித்து திருச்சி மாவட்டத்தில் இன்று 17 11 2024 காலை 6 மணி வரை பெய்த மழை விவரங்கள் பின்வருமாறு லால்குடி பகுதியில் 26.4 மில்லி மீட்டரும் சமயபுரம் பகுதியில் 6 மில்லி மீட்டரும் மணப்பாறை ஸ்ரீரங்கம் பகுதியில் 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது..!!

Read Previous

திருமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் 50 ஆடுகள் வெட்டி அன்னதானம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!!

Read Next

உலகம் தரம் வாய்ந்த பதிவை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திய இசையமைப்பாளர் தமன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular