மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சலோ அல்லது சாதாரண காய்ச்சலோ வருவது இயல்புதான், அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் அறிகுறி தமிழகத்தில் தெரியவந்துள்ளது..
தமிழகத்தில் நடபாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,538 உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, மேலும் டெங்கு காய்ச்சலினால் நான்கு பேர் உயிர் இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கும் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாப்பதற்கும் தமிழகத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார், மக்கள் மழைக்காலங்களில் சுடுதண்ணீரையும் சாதாரண காய்ச்சல் என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார், டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு தகுந்த வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளார்..!!