தமிழ்நாட்டை வெளுக்கப் போகும் கோடை மழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில்  இன்று(16.05.2024) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வருகின்ற மே 17ஆம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதனை தொடர்ந்து வரும் மே 18ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read Previous

சேலம் விரையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை..!!

Read Next

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular