தமிழ் நடிகை வீட்டில் திருட்டு..!! வேலை செய்த பெண் உள்பட 2 பேர் கைது..!!

பிரபல தமிழ் நடிகை வீட்டில் திருடு நடந்ததை எடுத்து அந்த வீட்டில் பணி செய்த பெண் உள்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை அதுல்யா கடந்த 2017 ஆம் ஆண்டு ’காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ’கதாநாயகன்’ ’ஏமாளி’ ’சுட்டுப் பிடிக்க உத்தரவு’ ’நாடோடிகள் 2’ ’வட்டம்’ ’கடாவர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் ’டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அதுல்யா வீட்டில் பாஸ்போர்ட் மற்றும் ரொக்க பணம் திருடு போனதை அடுத்து அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் அவரது வீட்டில் வேலை பார்த்த செல்வி என்ற பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது அவர் தானும் தன்னுடைய தோழியும் சேர்ந்து அதுல்யா வீட்டில் பணம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரையும் அவரது தோழியையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அதுல்யா பாஸ்போர்ட் திருடப்பட்ட நிலையில் அந்த பாஸ்போர்ட் இப்போது எங்கே உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

மாசாணி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா?.. கட்டாயம் அறியவும்..!!

Read Next

குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular