Oplus_131072
தமிழ் மரபு படி காலை கண் விழித்தவுடன் சாமி அறையில் வைத்திருக்கும் கனிகளை முதலில் காண வேண்டும்.
அதாவது புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒரு வெண்கல தாம்பூல தட்டில் முக்கனிகளான மா,பலா,வாழை பழங்களை வைத்து அதில் வெற்றிலை பாக்கு கொஞ்சம் பணத்தை வைத்து அதன் அருகில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும்!
சித்திரை முதல் நாள் காலை எழுந்தவுடன் அந்த தாம்பூல தட்டில் இருக்கும் பழங்களை பார்த்துவிட்டு பிறகு கண்ணாடியில் உங்கள் முகத்தை காண வேண்டும்!
இதனால் ஆண்டு முழுவதும் நமக்கு மனம் மகிழ்ச்சியும்,நிம்மதியும் அடைந்து செல்வம் பெருகும் என்பது தமிழ் மரபாகும்!
வரும் 14-4-2026 சித்திரை ஒன்று கனி காணும் நேரம் அதிகாலை 5-00 : 6-00 ஆகும்.




