தம்பி, தங்கையுடன் கடலில் தத்தளித்த தாய்.. ஹீரோவாகிய 13 வயது சிறுவன்..!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடலில் தத்தளித்த தனது குடும்பத்தை காப்பாற்ற நான்கு மணி நேரம் கடலில் நீந்தி சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் தத்தளித்த குடும்பம்

மேற்கு ஆசியாவில் உள்ள பெர்த் மாகாணத்தில் உள்ள குயின்டாலப் கடற்கரையில், ஜோவான் ஆப்பல்பீ(47) என்ற பெண் விடுமுறையைக் கழிப்பதற்கு தனது 3 குழந்தைகளுடன் வந்துள்ளார்.

நீண்ட துடுப்பு கொண்ட படகில் சென்று கடலில் விளையாடியுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பயங்கர காற்று வீசியதால், கரையிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவிற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

 

மேலும் மிகப்பெரிய அலைகள் எழுந்ததால் குறித்த நான்கு பேரும் கடலில் விழுந்தனர். லைப் ஜாக்கெட் அணிந்திருந்து கவிழ்ந்து கிடந்த படகை பிடித்துக் கொண்டு இருந்ததால் உயிர் தப்பினர்.

இத்தருணத்தில் அவரது 13 வயது மகன் ஆஸ்டினிடம் தாய், நீ இங்கிருந்து நீந்தி சென்று உதவிக்கு யாரையாவது அழைத்துக் கொண்டுவா என்று கூறியுள்ளார். உடனே தனது குடும்பத்தினருக்காக நீந்த தொடங்கியுள்ளார்.

 

 

4 மணி நேரம் நீந்திய சிறுவன்

நீந்த தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அவரது லைப் ஜாக்கெட் அவருக்கு நீந்த தடையாக இருந்ததால் அதனை கழற்றிவிட்டு லைப் ஜாக்கெட் இல்லாமல் இன்னும் இரண்டு மணி நேரம் நீந்தியுள்ளார்.

பின்பு கரையை அடைந்த சிறுவன் அங்கு தனது தாயின் கைப்பையில் இருந்த செல்போனை எடுத்து உதவி மையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், கரையிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில், படகில் தொங்கிக் கொண்டிருந்த குடும்பத்தை ஹெலிகப்டர் மூலமாக தேடி கண்டுபிடித்துள்ளனர்.

 

குறி்த்த சிறுவனின் செயலால் பிரமித்து போனதுடன், பாராட்டவும் செய்துள்ளனர். இதற்கு சிறுவன் நான் சூப்பர் ஹீரோ இல்லை தனது தாய் மற்றும் தங்கை, தம்பியைக் காப்பாற்ற இவ்வாறு 4 மணி நேரம் நீந்தி சென்றேன் என்று கூறியுள்ளார்.

Read Previous

பக்கவாதம் வராமல் இருக்க ஜப்பானியர்கள் என்ன செய்கின்றனர்?.. வெறும் 15 நிமிடம் போதுமாம்..!!

Read Next

இந்த ராசியினர் சிறிய தங்கம் அணிந்தாலும் செல்வம் குவிவது உறுதி..!! உங்க ராசியும் இதுல இருக்கா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular