தயக்கமின்றி உன் இலக்கை அடைவதற்கு விடாமுயற்சியும் உன் உழைப்புமே மூலதனம்..!!

தயங்குகிறவன் கை தட்டுகிறான் துணிந்தவன் கை தட்டல் பெறுகிறான்.
தொடர்ந்து தோல்வி என்று முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். அது ஒருபோதும் முடிவைத் தராது….

ஒரு செயலை எப்படி செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே மிகச்சிறந்த பாடம்.
முதலில் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயலில் இறங்குங்கள். உங்களை நீங்கள் நம்பாமல், இந்த உலகம் ஒருபோதும் உங்களை நம்பாது.
சில திருப்பங்கள் கடுமையானவை தான் ஆனால், பாதையைத் தொடர்வதற்கு கடந்து தான் ஆகவேண்டும்.
பாதைகளை மட்டும் சரியாக தேர்ந்தெடுங்கள். இன்று இல்லை என்றாலும் நாளையாவது நம் இலக்கை அடைந்து விடலாம்.

உன் பிரச்சினை எதுவாக இருப்பினும் சற்று விலக்கி வை. ஓய்வெடு. நிதானமாக யோசி, பின் செயல்படு.
எல்லாம் சுபமாய் முடியும்.
நிதானம் ஒன்றே மனிதனை நல்வழிக்கு கொண்டு செல்கிறது.
ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு சிவப்பு சிக்னல் போலத்தான். நீங்கள் சிறிது நேரம் காத்திருந்தால், அது பச்சை நிறமாக மாறும்.
உங்கள் மனதில் யாரையும் சுமக்காத வரையில் உங்கள் பயணம் சுகமாகவே இருக்கும்…

முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள். அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
மெய்யென்று நினைத்த ஒன்று,
பொய்யென்று உணரும் தருணத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளும் பாடம் மிக வலிமையானது.
பள்ளமறியாமல் தடுக்கி விழுவது தவறில்லை. மீண்டும் அந்த இடத்தை எச்சரிக்கை யோடு கடக்க முயற்சிக்காமல் கவனக்குறைவாக இருப்பதே மாபெரும் தவறு.
விழும்போது நகைப்புக்குரியவராக விழுந்தாலும், எழும் போது வியப்புக்குரியவராக எழவேண்டும்..!!

Read Previous

மதிய நேரத்தில் தூங்குபவர்கள் நீங்கள்…!! அப்போ மதிய நேரத்தில் தூங்குவதால் ஏற்படும் நோயைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

உங்களின் சிறுநீரின் நிறம் இப்படி உள்ளதா..?? அப்போ உங்களுக்கு அந்த பிரச்சனை தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular