தயிரில் வெள்ளரி விதை கலந்து சாப்பிட்டால் கோடை நோய்களிலிருந்து விடுபடலாமா..? முழு விவரம் உள்ளே..!!

தற்பொழுது இந்தியா முழுவதும் கோடை காலம் நிலவி வருகிறது, பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவிலே இருக்கும், எனவே நாம் உண்ணும் உணர்வில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

நம் உடலுக்கு சூட்டை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்ப்பது நம் உடலுக்கு நன்மை பயக்கும், நம் உடலில் அதிக வெப்பநிலையை அடையும் போது பலவிதமான நோய் பாதிப்புகள் நமக்கு ஏற்படும். நோய் பாதிப்பு ஏற்பட்ட பின் மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் நோய் பாதிக்கு முன்பே சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நன்று.

அதன்படி உடலுக்கு குளிர்ச்சியை தரும் தயிரில் வெள்ளரி விதைகளை கலந்து சாப்பிட்டால் பல்வித நன்மைகள் ஏற்படுகின்றது என்று சித்த வைத்திய வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களான சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடல் வெப்பநிலை அதிகரிப்பது, வேர்க்குரு, வேர்வை நாற்றம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் தயிரில் வெள்ளரிக்காயை ஊறவைத்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் வெளியேறிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் நாம் தோல் பளபளப்பாகவும் ,மென்மையாகவும் இருப்பதற்கு தயிர் மற்றும் வெள்ளரி விதை  மிகவும் பயனுள்ளதாய் உள்ளது, வெயிலின் தாக்கத்தால் நம் தோலின் நிறம் மாறுவதை தடுக்க வெள்ளரிவிதை பயன்படுகிறது. குறிப்பாக உடலில் ஆண்டி ஆக்சிடன்களை அதிகப்படுத்தி வெயிலினால் ஏற்படும் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.

உடலில் நீர் வறச்சி ஏற்படுவதை தவிக்கின்றது. எனவே தயிரில் வெள்ளரி விதை ஊறவைத்து சாப்பிட்டு வருவது பலவித நன்மைகளை அளிக்கிறது என்பதால் சித்த மருத்துவர்கள் இதனை அடிக்கடி உண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Read Previous

மன அழுத்தத்தால் பரிதவிக்கிறீர்களா..? ஜப்பானியரின் இந்த எட்டு பழக்கத்தை ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

வேற லெவல்தான்!! பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சூரியின் கருடன்..!!5 நாட்களில் இவ்வளவு வசூலா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular