இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை தயிரை விரும்பி சாப்பிடுவது வழக்கம், அப்படி விரும்பி சாப்பிடும் தயிரில் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர், முகம் அழகு பெறும், எதிர்ப்பு சக்தி கூடும், மேலும் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் கூறுவதோடு உடலுக்கு தேவையான ஆரோக்கியங்கள் நிறைந்த சத்துகள் தயிரில் இருப்பதாக தெரியவந்துள்ளது..
தயிர் சாப்பிடுவதால் முடி ஆரோக்கியமாக வளர்ச்சி அடையும், மேலும் முகத்தில் உள்ள தோல் பகுதி சுருங்காமல் அழகாக காட்சியளிக்கும், மேலும் முகம் பளபளப்பாக இருக்க தயிரை முகத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம், உடல் பருமனை குறைப்பதற்கு தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, உடலை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு பெரிதும் உதவி புரிகிறது, இதயத் துடிப்பை சீராகவும் ரத்த அழுத்தத்தை சரிவர இயக்குவதற்கு தயிர் மிகவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது, மேலும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளும் பொழுது முகம் பளபளப்பாகவும் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகவும் இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..!!




