
தர்பூசணி பழம் விதைகளில் இருக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள்..!!
தர்பூசணி பழம் என்றாலே இது ஒரு கோடை கால பழம் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தக் கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் அனைவரும் தர்பூசணி பழம் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பழத்தில் இந்த தர்பூசணி பழமும் ஒன்று. இந்நிலையில் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு அதில் இருக்கும் விதையை நாம் குப்பையில் தூக்கி போட்டு விடுவோம். இந்த குப்பையில் தூக்கிப் போடும் தர்பூசணி விதையில் இருக்கும் அற்புதமான மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தர்பூசணி பழத்தில் இருக்கும் விதைகளை சாப்பிடுவதால் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி தர்பூசணியின் விதைகளில் ஜிங்க் மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்புகளும் நிறைந்து இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகவும் உதவுகிறது. தர்பூசணி விதைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இதய ஆரோக்கியத்திற்கு இந்த தர்பூசணி விதைகள் மிகவும் உதவியாக இருக்கும். தர்பூசணி பழத்தில் இருக்கும் வைட்டமின் பி நரம்பு மண்டலத்தில் செயல்பாடுகளில் முக்கியமான பங்கு வகிக்கிறது.இந்த விதைகளை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.