தற்காப்பு கலைகளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும்..!! ஆளுநர் ஆர் என் ரவி..!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான புகழ்பெற்ற 50 தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு ஆளுனர் ஆர் என்  ரவி விருதுகள் விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார்.

அதன் பின் ஆளுநர் ஆர் என் ரவி பேசியது “சிலம்பம், மான் கொம்பு, குத்து வரிசை, வாள் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளின் தாயகம் இந்தியா தான். இங்கிருந்து தான் இந்த கலைகள் மேலை நாடுகளுக்கு பரப்பப்பட்டது. யோகா, சிலம்பம் போன்றவை கற்பதால் உடலும் மனமும் தெளிவடைவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகிக்கின்றது.

தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும். இந்த கலைகளை தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கொண்டு செல்ல வேண்டும்”, என ஆர் என் ரவி பேசி உள்ளார்.

Read Previous

சுவை மிக்க மணமணக்கும் பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி..? இதோ உங்களுக்காக..!!

Read Next

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா..? வெளியான திடுக்கிடும் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular