தற்காலிக தடைகளை தாண்டி நாம் இலட்சிய பயணம் மீண்டும் தொடரும்..!! டிடிவி தினகரன் உருக்கம்..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வாக்களித்த தேனி  மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் செய்தி குறிப்பில் பேசி இருப்பது “உங்கள் வீட்டுப் பிள்ளையாக, நண்பனாக,, சகோதரனாக என்னை நேசிக்கும் தேனி நாடாளுமன்ற தொகுதி மக்கள் அனைவர் மீதும் கொண்டிருக்கும் அன்பு சாம்ராஜ்யம் என்றென்றும் தொடரும். பணம், பரிசுப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகளை கடந்து அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்ண மறந்து, உறக்கம் தொலைத்து, தன்னலம் கருதாமல் கழகத்திற்காக ஒவ்வொரு நொடியும் உழைத்த என் உயிரினும் மேலான தொண்டர்களுக்கும் அனைத்து நிலையிலான நிர்வாகிகளுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கின்றேன்.

தற்காலிக தடைகள் தாண்டி நாம் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நம் கொண்டிருக்கும் லட்சியத்தை அடையும் வரை உறுதியாக தொடர்வோம். என்றும் உங்களோடு இருப்பேன். எப்போதும் உங்களுக்காகவே உழைப்பேன்”, என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

https://x.com/TTVDhinakaran/status/1797994179936588108?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1797994179936588108%7Ctwgr%5Eb53b62af9ecf51d028c1199f68dcb01fff806a5d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.seithipunal.com%2Ftamilnadu%2Fttv-dhinakaran-say-about-election-2024-result

Read Previous

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜே ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர் சரிவை சந்திக்கும் அதிமுக..!!

Read Next

தனது பதவியை ராஜினாமா செய்கிறாரா பிரதமர் மோடி..!! பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது மத்திய அமைச்சரவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular