தற்கொலை செய்துகொண்ட டிக்டாக் பிரபலம், போலீசார் விசாரணை…!

டிக் டாக் மற்றும் ரீல்ஸ் புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது…!

டிக்டாக் இருந்தபோது நடனம் செய்து வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் பிரபல பாடலான சிக்கு புக்கு ரயிலிக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவருக்கு நடன ரியாலிட்டி நிகச்சியான  டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்திருந்தது. 

இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில், ரமேஷ் இன்று சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  இன்று தான் அவருக்கு பிறந்த நாள் என்று தெரியவந்துள்ளது. 

மேலும், திடீரென ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரமேஷ் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

Read Previous

பங்கு சந்தை சரிவால் அதானிக்கு கடும் வீழ்ச்சி…!

Read Next

ஜம்மு காஷ்மீர் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டின் அருகே வெடிகுண்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular