“தற்கொலை செய்துக் கொள்ளாமல் காப்பாற்றியது வடிவேலு தான்” – மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி.!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “மாமன்னன்” என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகின்றது.

50 கோடி ரூபாய்க்கு மேல் திரைப்படம் வசூல் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின், பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருந்தா திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

திரைப்படத்தில் அனைவரது நடிப்பு மற்றும் பின்னணி இசை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் தன் வாழ்வில் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருக்கிறார்.

அப்படி ஒரு முறை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது டிவியில் வடிவேலு நிகழ்ச்சியை பார்த்தாராம்,  அதன் பிறகு தற்கொலை முயற்சியை கைவிட்டு விட்டாராம் என்றும் தன்னை காப்பாற்றியது வடிவேலின் நகைச்சுவை தான் என உணர்ச்சி பூர்வமாய் தெரிவித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Read Previous

எங்கேயும் காதல்.. ஹன்சிகாவின் முதல் காதல் .! உண்மையை பகிர்ந்த ஹன்சிகா.?

Read Next

BECIL ஆணையத்தில் ரூ.22,744/- சம்பளத்தில் வேலை – 250 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular