தலைக்கு எண்ணெய் வைக்க போறிங்களா.? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!!

பொதுவாக நமது முடிக்கு எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம் என்றாலும் இதுபோல எண்ணெய் தலைக்கு வைக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்வது நன்று.

அதிக அளவிலான பெண்கள் முடிவில் உள்ள சிக்கல்களை நீக்க தலையில் எண்ணெய் வைத்துவிட்டு உடனடியாக சீப்பை வைத்து பிரஷ் செய்வார்கள். இது மிகப்பெரிய தவறாகும். தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்த பின்பு உடனே தலையில் சீப்பை வைத்து சீவும் போது நமது கூந்தல் உடையும். முடி உதிர்வையும் ஏற்படுத்தும். பலர் இரவு நேரங்களில் தலையில் எண்ணெய் வைத்துவிட்டு பின்னர் காலையில் எழுந்தவுடன் தலைக்கு குளிப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. இதை பலரும் செய்து கொண்டு இருப்பார்கள். இரவு முழுவதும் தலையில் எண்ணெய் வைப்பதால் முடி பிசுபிசுப்பு தன்மைக்கு ஆளாகும். மேலும் நமது தலையணை மற்றும் படுக்கை உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை சேர்க்கும். இதனால் தொற்றுகள் ஏற்படலாம்.

அதிக நேரம் முடியில் எண்ணெய் இருப்பதால் இது முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை பாதிக்கும். ஈரமாக இருக்கும் போது தலையில் எண்ணெய் வைப்பது பலருக்கும் இருக்கும் பழக்கம்தான். இதுபோல செய்வதால் முடி உதிர்வு ஏற்படும். முடியை நன்றாக காய வைத்துவிட்டு பின்னர் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். எண்ணெய் முடிக்கு நன்மைதான் என்றாலும் அதிகப்படியான எண்ணெய் வைப்பது நல்லது இல்லை.

அவ்வாறு அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்தும் போது தலையில் அழுக்கு சேர்வதுடன் அதை விடுவிக்க நிறைய ஷாம்பு பயன்படுத்த வேண்டிய இருக்கும். இதனால் முடி உதிர்வு ஏற்படும். முடியை அதிகப்படியாக இறுக்கமாக கட்டக்கூடாது. இதனால் மயிர் கால்கள் பாதிக்கப்பட்டு உடைந்து விடும். எப்போதும் கொஞ்சம் தளர்வாக முடியை கட்டுவது முடியை பாதிக்காமல் இருப்பதுடன் முடி உதிர்விலிருந்தும் தப்பிக்க உதவி செய்கின்றது.

Read Previous

வெள்ளியங்கிரி மலையில் இன்று தான் கடைசி..!! இனி மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை..!!

Read Next

மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புத உணவுகள்..!! என்னென்ன தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular