தூக்கம் என்றவுடன் தலையணை படுக்கை போன்றவை நம் கண் முன்னே வந்து நிற்கும் அதிலும் தலையணை இருந்தால் தான் எனக்கு தூக்கம் வரும் என்று சொல்பவர்கள் அநேகம் ஆனால் தலையணை இல்லாமல் தூங்குவதால் கிடைக்கும் ஐந்து வருடங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்…
மன அழுத்தம் நீங்குதல் : தலையணை வைத்து தூங்கும் போது மன அழுத்தம் உருவாகும் என்பதால் தூங்கும் போது மனம் அழுத்தம் அல்லது பதற்றமாக இருந்தால் தலையணையை பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும் ஆகவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட தலையணையை தவிர்த்து விடுங்கள்…
தலைவலி வராது : தலையணை வைத்து தூங்குவதால் தலைக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்காமல் போகக்கூடும் இதன் காரணமாக நரம்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சரியாக கிடைக்காமல் தலைவலியும் ஏற்படக்கூடும் என்பதால் தலையணையே இல்லாமல் தலை சாய்த்து தலைவலியை தவிர்த்து விடுங்கள்…
சரும பிரச்சனைகள் வராது ; தலையில் இருக்கும் அழுக்குகள் தலையணையில் தங்கி பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் இதனால் அது முகத்தில் பட்டு முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் இத்தகைய சூழ்நிலையில் தலையணையை இல்லாமல் தூங்கினால் முகப்பரு பிரச்சனை வரவே வராது..
நிம்மதியாக தூங்கலாம் ; தலையணை வைத்து தூங்கும் போது தூக்கமின்மை பிரச்சனை வருவது பொதுவானது இரவு தூங்கும் போது உங்களுக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்றால் இன்றிலிருந்து தலையணையில்லாமல் தூங்க பழகுங்கள் இதனால் இரவு நீங்கள் நிம்மதியாக தூங்குவீர்கள் மற்றும் மறுநாள் முழுவதும் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள்..
முதுகு வலி வராது ; நாம் தலையணை வைத்து தூங்கும் போது நம்முடைய முதுகு தண்டும் தலையும் ஒரே மாதிரியாக இருக்காது. அதுவும் குறிப்பாக தலையணை உயரமாக இருந்தால் முதுகிலிருந்து வளைந்து காணப்படும் அதாவது இரவு தலையணையில் தூங்கும்போது காலையில் எழுந்தவுடன் முதுகு வலி உடல் விரைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இந்த பிரச்சினைகளை தவிர்க்க தலையணை இல்லாமல் தூங்குவது தான் நல்லது இதனால் தலையும் மற்றும் முதுகெலும்பும் ஒரே நிலையில் இருக்கும் முதுகு வலியும் வராது. தலையணை இல்லாமல் தலை சாய்த்து தூங்கினால் தாலாட்டுப் பாடி தூங்க வைப்பது போன்ற உணர்வை பெற முடிகிறதா என்பதை அனுபவித்து பாருங்கள்..!!