தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??
தினமும் சிறிதளவு எண்ணெயை தலையில் தேய்த்து குளிக்க என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. தினமும் தலை குளிக்க நம்மில் பலரும் விரும்புவோம். ஆனால் தலையில் எண்ணெய் வைத்து குளிக்க சோம்பேறித்தனம் பட்டு அதை மறுப்போம். இந்நிலையில் தலையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து குளித்தால் தோல் வறட்சி நீங்கும். உடல் வலி மற்றும் சோம்பல் தீரும். அடிக்கடி சளி பிடிக்க செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு பல வியாதிகளை கூட இதன் மூலம் நாம் கட்டுப்படுத்த முடியும்.
பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதால் உடல் எடை சரும வனப்பு குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பலவிதமான நன்மைகளை இந்த குளியல் நமக்குத் தருகிறது. அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் பல நாட்களில் என்னை குளியல் போடுவார்கள். அதற்கான நேரமும் இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் பண்டிகை நாட்களில் கூட எண்ணெய் தேய்த்து குளிப்பதை கடைபிடிக்கவில்லை. முன்னோர்கள் காலகட்டத்திலும் நேரம் இல்லாமல் தான் இருந்தது ஆனால் அவர்கள் இதற்கான நேரத்தை ஒதுக்கி இதன் மருத்துவத்தை தெரிந்து கொண்டு இதை பின்பற்றினார்கள். அதே மாதிரி தான் நாமும் இந்த மருத்துவத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.




