
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடித்துவரும் இளைய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வருகின்ற அக்டோபர் மாதம் அந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தின் நடிக்க இருக்கிறார்.
விஜய் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சினிமாவிலிருந்து சிறிது ஓய்வெடுத்து அரசியலுக்கு வரப்போவதாகவும் செய்திகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பதும் தளபதி விஜய் தான். தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது விஜய் இது twitter சமூக வலைத்தளங்களில் பரவல் ஆக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்திய அளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட twitter கணக்குகளை பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் இந்திய அளவில் விவாதிக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் முதலிடத்தில் இருப்பவர் தான் இந்திய பிரதமர் மோடி .
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி அத்தியானந் மற்றும் மூன்றாவது இடத்தில் இந்திய அணையின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் இருக்கின்றார். இதில் ஏழாவது இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ்நாட்டைச் சார்ந்த இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.