
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து தனது பரபரப்பான நடிப்பை துவங்கி இருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.
இதை தொடர்ந்து தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்திற்கும் தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் ரஜினி தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த பிறகு தொடங்க இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.