• September 24, 2023

“தலைவர மாறியே தான் தளபதியும்…” ஜெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் உண்மையை போட்டு உடைத்த விடிவி கணேஷ்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கொண்டு வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

படம் வெளி ஆவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் விசை வெளியிட்டு விழா தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக இருக்கும் தளபதி விஜய் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தங்களது அனுபவங்களையும் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர் . அப்போது மேடையில் பேசிய விடிவி கணேசன் தளபதி விஜய்க்கு பிறகு டைமிங் மற்றும் சின்சியாரிட்டியை தலைவர் ரஜினிகாந்த் தான் பார்த்ததாக தெரிவித்து இருக்கிறார். மேலும் மிகவும் எளிமையான மனிதராக சூட்டிங் பாட்டில் நடந்து கொண்டார் என்றும் , கேராவன் இருந்தாலும், எப்போதும் வெளியில் இயற்கையோடு தான் அமர்ந்து இருப்பார் என்றும் தெரிவித்து இருக்கிறார். இது போன்ற எளிய குணங்களை விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் போது தளபதி விஜய் இடம் கண்டதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.

Read Previous

கல்வித்துறை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் சிக்கி சின்னா பின்னமாகி போச்சு..!! எடப்பாடி பழனிச்சாமி வேதனை..!!

Read Next

நாவில் எச்சு ஊறும் ஸ்ரீரங்கம் வத்த குழம்பு செய்வது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular