தலைவலி குறைய நீர் கடுகடுப்பு நீங்க அவதிப்படுகிறீர்களா? இந்த முறைகளை கையாளுங்கள்….
நீல நொச்சி கருநொச்சி வெள்ளை நொச்சி என பலவகை நொச்சிகள் உள்ளது ஆனால் எல்லாவற்றிற்கும் ஆன மருத்துவ குணம் ஒன்றுதான் நொச்சி இலை மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும், நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளை போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றை தலைவலி குறையும், நீர் கடுகடுப்பு நிரந்தரமாக சரியாக சீரகம், சோம்பு வெந்தயம், சின்ன வெங்காயம் கொத்தமல்லி விதை இது எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்து மோர் அல்லது தயிரில் கலந்து குடித்து வர வேண்டும் அல்லது இவை அனைத்தையும் பொடியாக அரைத்து தேனிலும் நெய்யிலும் கலந்து சாப்பிடலாம் இப்படி சாப்பிடுவதன் மூலம் நீர் கடுகடுப்பு உடனே குணமாகும், அதேபோல் உடல் எடை குறைய காலை வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை சேர்த்து குடிப்பதால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும், மேலும் வறட்டு இருமல் நீங்க மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் உடனே சரியாகிவிடும்…!!




