விருதுநகர் கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அழகேந்திரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அழகேந்திரனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, பெண்ணின் உறவினரான பிரபாகரன் அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.