• September 14, 2024

தளபதி விஜயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த நபர் யார்.? மனைவியிடம் கூட பேச முடியாதாமே.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராய் வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் எவராலும் எட்ட முடியாத உயரத்துக்கு சென்றது  என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனக்கென ரசிகர்கள் படையை அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

விஜய் நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகிய “லியோ” என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக அவர் “கோட்” என்கின்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். அவருடன் பிரசாந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வருகின்றனர். கடந்த ஆண்டு அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை விருது வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த வருடமும் அதே போலவே மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே கட்சி தொடங்கியிருந்தாலும் அந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் அவரது நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை அனைத்தையும் ஆட்டி வைப்பது புஸ்ஸி ஆனந்த் தான் என்று கூறப்படுகிறது. அவர் எப்போதும் விஜய்யோடு இருக்கக்கூடிய ஒரு நபர். அரசியல் பற்றி பேசுவதாக இருந்தாலும் அல்லது புதிய படங்களில் அவர் நடிக்கப் போவதாக இருந்தாலும் புஸ்ஸி  ஆனந்திடம் கூறி அவர் சம்மதித்தால் மட்டுமே அவர் களத்தில் இறங்குவாராம், அவ்வளவு ஏன் தனது தாய், தந்தையுடன் கூட விஜய் அதிகம் பேசாமல் பார்த்துக் கொள்கிறாராம். தனது நிலைப்பாடு என்ன என்பது பற்றி தனது மனைவி மற்றும் மகன்களிடம் கூட விஜய் பேச அவர் அனுமதிப்பதில்லை அந்த அளவிற்கு தனது கட்டுப்பாட்டில் விஜய் புஸ்ஸி ஆனந்த் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ப்பா.. தாறுமாறு கவர்ச்சி.! கடலுக்கே காய்ச்சல் வரவைத்த பேச்சுலர் நாயகி.!! சூடேத்தும் புகைப்படங்கள்..!!

Read Next

ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 18 இந்திய பெண்கள் மீட்பு? வைரல் வீடியோவின் உண்மை என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular