தள்ளிப்போகும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்?..
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலோடு மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.