
தற்போதைய நவீன உலகில் அனைத்து பரிமாற்றமும் டிஜிட்டல் மாயமாக மாறிய நிலையில் UPI இன் பயன்பாடு மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஷாப்பிங், டிக்கெட் முன்பதிவு முதல் தேர்வுகளுக்கான கட்டணம் வரை அனைத்திற்கும் மக்கள் UPI முறையை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதனால் சில நேரங்களில் பயனாளர் தவறுதலாக வேறு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வாய்ப்பு அதிகம் உண்டு. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து RBI தற்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வெளியிட்ட கூற்றின்படி ” உங்களுக்கு தெரியாத தனிநபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு UPI மூலம் நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் 18001201740 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் புகாரை பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், “உங்களது புகார் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், அடுத்த 48 மணி நேரத்திற்குள் நீங்கள் தவறுதலாக அனுப்பி பணம் முழுவதும் வரவு வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.