தவெகவில் இணைந்தார் ஜேசிடி பிரபாகர்..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், வில்லிவாக்கம் முன்னாள் எம்எல்ஏவுமான ஜேசிடி பிரபாகர், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், ஓபிஎஸ் உடன் பயணித்து வந்தார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தவெகவுக்கு படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

Read Next

நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular