
தாத்தா……என் பிரண்டு( சிறுகதை)
தாத்தா ஊருலருந்து வந்திருந்தாரு என்னைப்பாக்க . என்னதான் அவரோட மகனோட மகளா நான் இருந்தாலும் மகனைவிட என்னத்தான் அவருக்கு ரொம்பப்பிடிக்கும். அதுக்கு இன்னோரு காரணமும் இருக்கு. நான் அசப்புல அவரோட சம்சாரம் அதான் என் அப்பத்தாமாதிரி இருக்குறேன்னு சொல்வாரு. எனக்கு அப்புடித்தெரியல ஒருவேளை நான் அவங்களை வயசானவன்ன பாத்ததால இருக்குமோ என்னாவோ…
எனக்குப்புடிக்குமேன்னு முருக்கு அதிரசம்
கடலைமுட்டாய் கமர்கட்டு இன்னும் நெறையாக் கொண்டு வந்திருந்தாரு எனக்காக ஆசையாஆனா அம்மா சொன்னாக அதெல்லாம் பட்டிக்காடுஅங்குனக்குள்ள அதான் கெடைக்கும் இங்கமாதிரியில்ல
பீசா பர்கர் சிப்ஸ் கேக் ஃப்ரைடு சிக்கனெல்லாம் அங்க கெடைக்காது அதெல்லாம் என்ன எண்ணையில
பொரிச்சாகளோ தெரியாது வயத்தக் கெடுத்துடும்திங்காதன்னாக
அதைக்கேட்டதும் தாத்தா மொகம் வாடிப்போச்சு. அவர் அப்ப ஒன்னும் சொல்லல.
அம்மாவும் அப்பாவும் வேலைக்கிப் போனதுக்கு அப்புறம் தாத்தா எனக்குச்சாப்புடக்குடுத்தாரு நான் யோசிச்சப்ப பயப்படாதே இந்தாம்மா நீ
சாப்புடும்மான்னு குடுத்தாரு
அப்ப எனக்கு அம்மா சொன்னதுநெனவுக்கு வந்திச்சி. கண்டதை அவர் வாங்கி கொண்டாந் திருக்காரு தின்னுபுட்டு அப்புறம் வாந்தி வயத்தவலினு அழுத கொண்டே புடுவேன்னு ந்னு மிரட்டி வைச்சிருந்துச்சு அதுமில்லாம கோவம் வந்துபோட்டுசாத்திப்புடும்
அதுனால வாங்கி ஓரமா வைச்சிட்டேன்
ஆனா தாத்தா பாத்துட்டாரு ஏம்மா சாப்பிடல
புடிக்காதான்னு கேட்டாரு எனக்குப்புடிக்கும் ஆனா சாப்புட்டா அம்மா அடிக்கும்ன்னு தயங்கிக் கிட்டே சொன்னேன் அவரு சிரிச்சிக்கிட்டாரு.
ஒங்க அம்மாவுக்கு வெவரம் தெரியல. அது நாகரீக மோகத்துல மூழ்கியிருக்கு. டி,விவிளம்பரம் பாத்து கெட்டுப்போயிருக்கு . உண்மை என்னான்னு இதுல பாரு நானும் பழைய காலத்து ஆளு இல்ல. இப்ப நான் காமிக்கிறதப்பாருன்னு சொல்லிட்டு
அவரோட செல்போன எடுத்தாரு அதுல
ஒருபேஜ் ஓபன் பண்ணாரு இந்தாம்மா இதைப்பாருன்னாருஅதுல டாக்டர் சிவராமன்னு ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு
அவருசொன்னாரு பிட்சா பர்கர் ஃபிரைடு சிக்கன் நூடுல்ஸ்ஏன் தவிர்க்கனும்றதப்பத்தி அழகாச்சொன்னரு. அதுல சேக்கப்படுற பிரிசர்வேட்டிவ் கெமிக்கல்ஸ் அப்புறம் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதுனால வரக்கூடிய சைடு எஃபெக்ட்ஸ் எல்லாத்தையும் விவரமா விளக்கமா சொன்னாரு. அதைக்கேட்டபின்னாடி இந்த கருமத்தையா சாப்புட்டுக்கிட்டு இருந்தோம் அதுனால நம்ம நாட்டுப்பணம் எப்புடி வெளிநாட்டுக்குக்குப் போகுது நம்ம ஒடம்பு எப்படி மெல்ல மெல்ல சாகுதுன்னு தெரிஞ்சதும் அதிர்ச்சியா இருந்துச்சு…
நான் கேட்டேன் அம்மாவுக்கு இது தெரியாதான்னுஅவருசொன்னாரு தெரிஞ்சிருக்கலாம் ஆனாஅதெல்லாம் சாப்புடறதுதான் ஸ்டேட்டஸ் நு
நெனைக் கிறாங்களோ என்னவோ
பழத்துல கொய்யாப்பழம் சிறந்தது ஆனா
ஆப்பிள்தான்னு உங்கம்மா சொல்லுவாங்க. எண்ணையில சிறந்தது நல்ல எண்ணெய் ஆனா ரீஃபைண்டு ஆயில்னு அவங்க சொல்லுவாங்க. சிறுதானியம் சாப்பிடச்சொன்னா அவங்க ஆஸ்திரேலியா ஓட்ஸ் சாப்புடச்சொல்வாங்க. இங்க கிடைக்கிற கம்பு கேழ்வரகு குதிரைவாலி தினைன்னு சொல்லமாட்டாங்க…..எல்லாம் விளம்பர மகிமைன்னாரு
சரி உனக்கு என்ன வெளயாட்டுத் தெரியும்னுகேட்டாருவீடியோ கேம்ஸ்ல நான் தான் நெறையா பாய்ண்ட்ஸ் எடுப்பேன்
ஸ்பைடர்மேன் சான் ஆண்ட்ரூஸ் ரிஸ்லிங்க்
எல்லாம் நல்லா வெளையாடுவேன்னேன்
கண்ணுபோய்டாதா அவ்வளவுநேரம் வீடியோபாத்தாவா நாம பல்லாங்குழி வெளையாடுவோம்னுவெளையாடசொல்லிக்குடுத்தார் வெளையாண்டோம். இந்த வெளையாட்டு பெண்கள் விரல்களுக்கு நல்ல பயிற்ச்சி. அதுவுமில்லாம இல்லாதவங்களுக்கு இருக்குறவங்க எப்படி குடுத்து ஒதவனும்ன் றதையும் சேத்தே சொல்லுதுன்னார் அந்த வெளையாட்டுல நான் தான் செயிச்சேன்
அப்புறம் கட்டம்போட்டு தில்லாக்கு ரைட்டா ராங்கா வெளையாண்டோம்ராத்திரி பூராம் நெறையாக் கதையெல்லாம் சொன்னாரு
மடிலபடுத்துட்டே கேட்டேன் வேற ஒலகத்தில இருந்தேன். எங்க அம்மா அப்பாவுக்கு என்கூடப்பேசநேரமே இருக்குறதில்ல. அம்மா என்கிட்ட சொல்றதெல்லாம் பசிச்சா ஃபிரிஜ்ல இருக்குறத எடுத்துச்சாப்புடு. என்னத்தொந்தரவு பண்ணாத அல்ரெடி ஐ யேம் வெரி டயர்டு … போரடிச்சா டி.வி பாரு என்னப்போட்டுச்சாவடிக்காதன்ற வார்த்தைகதான்.
அப்பா அதுக்குமேல அவர் வாரதே 9- 10 மணி ஆயிடும். வந்ததும் ரிலாக்ஸ் ஆகி சாப்புட்டு அவர் ரூமுக்குள்ள புகுந்தார்னா அவரை டிஸ்டர்ப் பண்ணுனா செம கோவம் வரும் நான் வரைந்த படங்களையோ என்னோட பள்ளிக்கூடப்பிரச்சனைகளையோ கேக்க நேரமில்ல. டெல் டு யுவர் மம்மின்னு வெரட்டுவாரு.. ரொம்ப அழுதா வெளிய கூப்பிட்டுப்போய் ஐஸ் கிரீம் வாங்கிக்குடுத்து உனக்காகத்தான் நான் ஒழைக்கிறேன் நு பாவமா சொல்வாரு…
ஆனா தாத்தா அப்படொயில்ல. மூணுநாளும் என்னோட பேசிக்கிட்டு இருந்தாரு. நான் வரைஞ்ச ஓவியங்களைபாத்து பாராட்டுனாரு இன்னும் நிறையா ஐடியா குடுத்தாரு. படிக்க கதை புத்தகங்கள் குடுத்தாரு.. அவரே தோசை சுட்டுக்குடுத்தாரு… சில எக்சைஸ் சொல்லிக்குடுத்தாரு.
மூணுநாளு பொழுதுபோனதே தெரியல
அன்னக்கி காலையில ஊருக்குக் கெளம்புனாருஎனக்கு அழுக அழுகையா வந்திச்சி
அடுத்தமுறைஎப்ப வருவீங்கன்னு கேட்டேன் தாத்தாகிட்ட நீ எங்க ஊருக்கு வாம்மான்னாரு கண்ணீரோட
எனக்கும் கண்ணீர் வந்துச்சு. தாத்தா எனக்கும் வர ஆசைதான் ஆனா வர விடமாட்டாங் களேன் னு சோகமா சொன்னேன்.
அதுக்கு அவர் சொன்னார் நீ வந்தாநான் சந்தோசப்படுவேன்னு சொல்லிட்டு அந்தப்பக்கமாத் திரும்பி கண்ணதொடச்சிக்கிட்டே போனார்….. என்னால கண்ணீரை அடக்கமுடியல…..
ஆனா கொஞ்சநாளில் தாத்தா ஊருக்குக்குப் போகவேண்டியதாயிடுச்சு. போனப்ப அவர் என்கூட பேசலை…ஏன்னா அவர் வாய கட்டிப்படுக்க வைச்சிருந்தாங்க… ஐஸ் பொட்டில….
அப்ப அழுதேன் தாத்தா பேசு தாத்தா என்கூடபேச யாருமே இல்ல நீ மட்டும்தான் இருந்த பேசு தாத்தான்னு கதறுனேன்…
அப்ப அம்மா சொன்னாங்க என்ன இது மேனர்ஸ் இல்லாம வாயப்பொத்திக்கன்னு
என்னால முடியல வாய்விட்டு அழுதேன்… தாத்தா ..தாத்தான்னு…….