பிறருக்கு தான் செய்யும் உதவி மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருக்கும் கேபிஒய் பாலா தற்போது மற்றொரு உதவி செய்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானவர் கேபிஒய் பாலா அந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கோமாளியாக கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளை மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பாலா தமிழ் சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஜூங்கா, தும்பா , சிக்சர், புலிகுத்தி பாண்டி, லாபம், ஆன்ட்டி இந்தியன், நாய் சேகர், நாய் சேகர் ரிட்டன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்திருக்கின்றார். விரைவில் இவரை ஒரு நடிகராக பார்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள்.
அதற்கேற்றார் போல் ராகவா லாரன்ஸும் அவரை ஹீரோவாக விரைவில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தார். சமீப காலமாக பலருக்கும் ஓடி ஓடி உதவி செய்து வருகின்றார் கே பி ஒய் பாலா. தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே பெரியளவு உதவி செய்யாமல் இருந்து வரும் நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு கொடுத்து உதவி செய்து வருகின்றார் கே பி ஒய் பாலா.
ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ், இலவச ஆட்டோ என பல விஷயங்களை செய்து வரும் இவர் மாற்றம் என்ற அறக்கட்டளையில் இணைந்து ராகவா லாரன்ஸ் உடனும் சேர்ந்து சில உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் பாலா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் தான் வாங்கிக் கொடுத்த இலவச ஆட்டோவில் பிறந்த குழந்தையை அவரின் வீட்டிற்க்கே சென்று நேராக பார்த்த கே பி ஒய் பாலா அந்த குழந்தைக்கு 50,000 ரூபாயை செலவுக்காக கொடுத்திருக்கின்றார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.