திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்தியம் என்பது பரஸ்பர அன்பையும் புரிதலையும் உணர்த்தும் ஒரு முக்கியமான ஒன்று. இந்நிலையில் திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து புதுமண தம்பதிகளாகவும் மிகவும் ஈடுபாடுடன் பெரிய விஷயத்தை கூட சிறிய விஷயமாக நினைத்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகள் கழித்து அவர்களுக்குடையே இந்த புரிதலும் இந்த அன்பும் ஒரு சில காரணங்களால் காணாமல் போகிறது. அதிலும் திருமணமான சில வருடங்கள் கழித்து தாம்பத்தியத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் நிகழ்கிறது.
தாம்பத்தியத்தில் கணவன் செய்யும் தவறுகள்
தான் ஆசைப்பட்ட நேரத்தில் எல்லாம் மனைவி தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று நினைப்பது.
தன்னுடைய சுகத்தில் மட்டும் கவனமாக இருந்து கொண்டு, மனைவியை திருப்திப்படுத்தாமல் இருப்பது.
மனைவியை பிடிக்கவில்லை என்றால், அவளுக்கு தாம்பத்தியத்தை மறுப்பது.
தாம்பத்தியத்திற்கு பிறகு மனைவியோடு சில மணித்துளிகள் சந்தோசமாக பேசாமல் இருப்பது.
தாம்பத்தியத்தில் மனைவி செய்யும் தவறுகள்
குடும்ப பொறுப்புகள் அதிகமானவுடன் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பது.
தன்னுடைய ஆசைகளையெல்லாம் கணவர் பூர்த்தி செய்தால் தான், அவருக்கு சுகம் கொடுப்பேன் என்ற நிர்பந்தம் விதித்திப்பது.
இப்படியாக கணவரும் மனைவியும் மாறி மாறி தவறுகள் செய்து, சந்தோசத்தை தரவேண்டிய தாம்பத்தியத்தை போர்க்களமாக மாற்றி விடுகிறார்கள்.
எனவே, இதையெல்லாம் தவிர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பரஸ்பர அன்பையும் தன் மனைவிக்கு கணவன் தான், என்று கணவனும் நம் கணவனுக்கு நாம்தான் என்று மனைவியும் நினைத்து வாழ்க்கை வாழ தொடங்கினாலே இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.




