தாம்பத்தியம் என்பது
கவிதையா…
காதலா…
கட்டிலா…
தொட்டிலா…
தொடுதலா…..
புணர்தலா…
அது ஒரு புரிதல்…
உடலாலும் மனதாலும் கணவனுக்கோ..
மனைவிக்கோ….
ஆத்மார்த்தமாக ஒப்புக் கொடுப்பது….
வேறு மூன்றாம் மனிதர் நுழைய ஊசிமுனை இடம் கூட கொடுக்காமல்….
மாமியார் பிரச்சினை…
நடத்தை சரியில்லை…
சுதந்திரம் இல்லை…
ஆணாதிக்கம் இதெல்லாம் நமக்கு நாமே கூறிக் கொள்ளும் சப்பைக் கட்டு…
அங்கு அறிவுக்கோ,திறமைக்கோ,படிப்பிற்கோ,பணத்திற்கோ,அழகுக்கோ,சுதந்திரத்திற்கோ…
ஆணாதிக்கத்துக்கோ எதற்கும் இடமில்லை…..
அங்கு இருக்க வேண்டியது
பரஸ்பர
அன்பு…
நம்பிக்கை…
பொறுமை….
என்னவள்..
என்னவன் என்கிற சுயம்….
யாருக்காக சம்பாதிக்க வேண்டுமென்ற நினைப்பு வரும்போதெல்லாம் மனைவியின் முகம் அவனுக்குள் புரளும்.
மனைவியின் முகமும், அவளின் சுவையான சமையலும் அவனுக்குள் மனைவி மீதான அன்பினை ஊழிக்காற்றாய் ஊதிப் பெருக்கும்.
அவனுக்காக அவனுடன் இசைந்து பெற்றுத் தரும் குழந்தைகளையும், குடும்பம் நடத்தும் அழகினையும் எண்ணி அவன் மாய்ந்து போவான்.
அவனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவிக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்ற ஆவல் மேலோங்க ஓடி ஓடி சம்பாதிப்பான்.
இது தான் வாழ்க்கை.
இது தான் தாம்பத்தியம்.
பிறருக்காக வாழ்வது தான் வாழ்க்கை.
கிராமப்புறங்களில் இந்த வாழ்வினைத் தான் முந்தானை முடிச்சு என்பார்கள்.
வாழ்வியல் கல்வியில் சமையல் கலை என்பது ஒரு முக்கியமான பகுதி. ஆனால் இன்றைய நவ நாகரீக பெண்கள் சமையல் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். விளைவு தாம்பத்திய வாழ்வு முறிவு.




