படித்ததில் பிடித்தது: தாம்பத்தியம் என்பது..!! ஆண்களுக்காக இந்த பதிவு..!!

*தாம்பத்தியம்_என்பது*

 

*வேலையிலிருந்து வந்ததும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மாற்றி மாற்றி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கூடவே மொபைலில் முகநூலிலும் உலாவிக்கொண்டே சாப்பிடுவது அனேக ஆண்களின் வழக்கமாகி விட்டது..!*

 

*மனைவி வந்து கேட்பாள்:* *”என்ன சாப்பிட்றீங்க?* *இட்லியா..?* *தோசையா என ..?”* *கணவனின் மனம் விரும்பும் தோசையை …* *ஆனால் அவன் சொல்லுவான் “எது வேணாலும் பரவால என ..!.” அவள் தோசை வார்ப்பாள்*.

 

*அவள் மறுபடி வந்து கேட்பாள்: “தோசைக்கு சட்னி செய்யவா, இல்ல மத்தியானம் வெச்ச சாம்பாரே போதுமா என ..?”*

 

*அவன் மனம் நினைக்கும் ‘காரசட்னியையும், சாம்பாரையும் கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என ..!’*

*ஆனால் அவன் சொல்லுவான்: “சாம்பாரே போதும் என..!*

 

*அவள் சுட சுட தோசையும் , சாம்பாரோடு, காரசட்னியும் செய்து எடுத்துக்கொண்டு வருவாள்..!*

 

*கடைசி தோசைக்கு பொடி, எண்ணைய் இருந்தால் நன்றாக இருக்குமே..!’ என்று மனதில் தோன்றினாலும், ‘எதுக்கு ஒரு தோசை சாப்பிடுவதற்கு ஏகப்பட்ட வேலை..?’ என்று அவன் நினைத்துக்கொண்டே சாப்பிட்டால்……..*

 

*அவள் பொடியையும் எண்ணையையும் எடுத்துக்கொண்டு வருவாள்…!*

 

*கணவனின் உரைக்காத மௌன சொற்களையும் உணரும் சக்தி சிறந்த தாம்பத்யத்துக்கு சிறப்பாக மனைவிக்கு உண்டு..*

 

*ஏராளமான ஆண்கள் மனைவியிடம் அன்பை வெளிக்காட்டியதில்லை. உடல்நலன், மனநலன், உணவு, மாத்திரைகள், எல்லாம் அவனுக்கு தோதாய் நடக்க அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான்.*

 

*மனைவியின் உடல்நலம், மனநலம், உணவு, சந்தோஷம், துக்கம் எல்லாம் அவளுக்கு அவள்தான் துணை ஆறுதல்… கணவன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.*

 

*அவன் வாழ்நாள் முழுதும், அவன் தேவைகள் பார்த்துக் கொள்ளப்படும்; அவன் குணக்குறைகள் மன்னிக்கப்படும் என்று வாழும் ஆண்கள் அதற்கு அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லாததை என்னவென்று சொல்லுவது.* ,

 

*ஆண்களுக்கு பணிவிடை செய்யவென்று படைக்கப்பட்டவள் அல்ல பெண்.. ஆனாலும் செய்கிறாள்.*

 

*ஆண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க என படைக்கப்பட்டவள் அல்ல பெண்… ஆனாலும் தாயாகிறாள் ஏன்?…*

 

*ஏனென்றாள் அவள் மனித குலத்திற்கு தேவையான அத்தனை தகுதிகளுடன் படைக்கப்பட்ட ஒரு உயிருள்ள கடவுள்… அதனால்தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள். அந்த தெய்வம் தான் இன்று ஆண்களையும் இவ் உலகையும் குடும்பம் என்ற ஒரு வட்டத்திற்குள் வழி நடத்துகிறது…

Read Previous

Just for Fun Only: ரூ.10,000 சம்பளம் கேட்கும் மனைவி..!!

Read Next

ரீல்ஸ் மோகத்தில் மனைவியை கொன்ற கணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular