
சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு பெற்ற தாயை நிர்கதியில் விட்ட பெண்ணின் சொத்து பத்திரத்தை வருவாய் அலுவலர் ரத்து செய்து உள்ளார். இதனை உயர் நீதி மன்றமும் உறுதி செய்து உள்ளது.
பெற்ற தாயை சரியாக பார்த்துக் கொள்ளாத மகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்தின் பத்திரத்தை வருவாய் அலுவலர் ரத்து செய்தது குறித்த உத்தரவை உயர் நீதி மன்றம் உறுதி செய்து உள்ளது. சுகுணா என்னும் பெண் அவரது தாயின் வயதான காலத்தில் பராமரித்து பார்த்துக் கொள்வதாக கூறியதாலேயே அவருக்கு அவரின் சொத்துக்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சுகுணா பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை பின்பற்ற தவறி உள்ளார், தாயைப் பராமரிக்காமல் நிர்கதியாய் நிற்க வைத்து உள்ளார். இதனால் வருவாய்த் துறை அலுவலர் அவருக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து உள்ளார். இதனை உயர் நீதி மன்றமும் இதே தீர்ப்பினை மீண்டும் உறுதி செய்து உள்ளது.