தாயை சுத்தியலால் தாக்கிய வேதனையில் மகன் தீக்குளித்து தற்கொலை..!!

கோவை அருகே உள்ள சரவணம்பட்டி வீரமாத்தியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி அம்சவேணி (64). இவர்களது மகன் கார்த்திக் (42). கார்த்திக் திருமணம் செய்யாமல் இருந்து வந்த இவர் பல்வேறு தொழில்களுக்கு தரகராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்தார். சம்பவதினத்தன்று மது போதையில் வீட்டில் தாய் அம்சவேணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது, அம்சவேணி பணம் கொடுக்காததால் அவரை சுத்தியலால் தலையில் தாக்கினார். இதில், அம்சவேணி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்நிலையில், போதை தெளிந்த பின்னர் தனது தாயை தாக்கிய வேதனையில் கார்த்திக் தவித்தார். விரக்தியில் அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், உடல் கருகிய அவர் இறந்தார். தீ பரவியதால் வீட்டில் உள்ள பொருட்களும் எரிந்து நாசமானது.

வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கார்த்திக் சடலமாக கிடந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Previous

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்ட பூசணிக்காய் சூப்..!!

Read Next

செக் மோசடி வழக்கு.. தங்க மீன்கள் பட தயாரிப்பாளருக்கு சிறை..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular