தாயை நிர்வாணமாக்கி, மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்..!! உள்துறை அமைச்சர் ஆறுதல்.!!

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வசித்து வந்த ஒரு 24 வயதுடைய இளைஞர் அதே பகுதியில் வசித்து வந்த மற்றொரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலை இருதரப்பு வீட்டினரும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவரும் ஒரு வீட்டை விட்டு தப்பி சென்றனர். இதன் காரணமாக அந்த பெண்ணின் வீட்டினார் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இளைஞரின் தாயிடம் சென்று சண்டை போட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் உச்சிக்கே சென்ற அவர்கள் அந்த தாயின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று உள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் மின்காம்பம் ஒன்றில் அவரை கட்டி வைத்து அடித்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடூர செயலில் ஈடுபட்ட ஏழு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த உள்துறை அமைச்சர் சம்பவம் நடந்த ஊருக்கு சென்று அந்த தாய்க்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மாணவர்களே உஷார்..!! இலவச லேப்டாப் வாங்குவதாக மோசடி..!! வாட்ஸப்பில் வைரலாகும் லிங்க்.!!

Read Next

ஆருத்ரா மோசடி விவகாரம்..!! 7 மணிநேரம் தொடர்ந்த விசாரணை..!! நடிகர் ஆர்.கே சுரேஷ் பரபரப்பு பேட்டி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular