திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வசித்து வருபவர் பரணி (வயது 28) இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார்.
பரணியின் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த கணவரை பிரிந்த 45 வயது உடைய பெண் ஜோதிக்கும் பரணிக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் காதலாகி பின்னாளில் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிக்கிய பரணி மார்ச் மாதம் சிறைக்கு சென்று வெளியே வந்தார். அப்போதிலிருந்து பரணிக்கும் பெண்மணி ஜோதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சண்டையில் பரணி ஜோதியை தாக்கி உள்ளார். ஜோதிக்கு மாதேஷ் என்ற 17 வயதுடைய மகன் உள்ளார். இந்நிலையில் தாய்க்கு நடந்ததை கண் முன்னே பார்த்த மகன் கொதித்துப் போயினார், பின் மாதேஷ் அவரது நண்பர் முகமது தௌபீக் என்பவர் சேர்ந்து பரணியை கத்தியால் சரமாரியாய் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தில் பரணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.