தாய்ப்பாலிலும் கலப்படமா..? தாய்ப்பாலை விற்பனை செய்தவர் கைது..!!

இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருளாக தற்பொழுது வர்ணிக்கப்படுவது. தாய்ப்பால் மட்டுமே இன்றளவில் பல விழிப்புணர்வுகள் காரணமாக பெற்றோர் ஆதரவின்றி தவிக்கும் பால் தட்டுப்பாட்டு காரணமாக வருந்தும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தாய்ப்பால் தானங்கள் வாயிலாக தாய்ப்பால் பெறப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட வாரியாக தாய்ப்பால் சேகரிப்பு சிறப்பு மையங்களும் மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றது. இதனிடையே கடந்த சில நாட்களாக தாய்ப்பால் நேரடி விற்பனை நடைபெற்று வந்தது. பல இடங்களில் தாய்ப்பால் என்ற பெயரில் பவுடர் பாலும் போலியான தாய்ப்பாலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தாய்ப்பால் பொதுவெளியில் விற்பனை செய்ய அனுமதி இல்லாத நிலையில் மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாய்ப்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல்களை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை வேட்டையில் கே ஆர் கார்டன் பகுதியில் கடை நடத்தி வந்த முத்தையா புரோட்டின் பவுடரை தாய்ப்பால் எனக்கூறி 200 மில்லி பாட்டிலில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இவர் தாய்ப்பால் தானம் செய்யும் பெண்களிடம் இருந்து இடைத்தரகர் வாயிலாக தாய்ப்பாலை பெற்று தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெற்றோரிடம் ரூ 800 முதல் ரூ1000 வரை பணம் பெற்று பாலினை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து விற்பனையில் போலியும் கலப்படமும் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 500 எம் எல் பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய்ப்பால் விற்பனை குறித்து 18 சிறப்பு குழுக்களை அமைத்து மாநில அளவில் சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்ப்பால் விற்பனை குறித்து புகார் அளிப்பதற்கு 94 440 42 322, 94 448 11 717 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் மாநில அரசு  அறிவுறுத்தி உள்ளது.

Read Previous

கர்ப்பிணி பெண்களுக்கு அரிதிலும் அரிதா ஏற்படக்கூடிய நோய்..!! தாயயும் சேயயும் காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

Read Next

திராவிட மாயயை உடைத்து எறிந்து மக்கள் வெளியே வாருங்கள்..!! தமிழிசை சௌந்தர்ராஜன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular