தாய்ப்பால் உற்ப்பத்திக்கு உதவும் கொண்டைக்கடலை..!! இதில் இவ்வளவு இருக்கா..?

புரதம் அதிகப்படியாக இருக்கக்கூடிய ஒரு உணவு கொண்ட கொண்டைக்கடலை. கால்சியம், நார்சத்து மற்றும் இரும்பு சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கும் வல்லமை கொண்டது. அசைவ உணவுகளை சாப்பிடாத சைவ பிரியர்களுக்கு இது ஒரு பிரசாதம்.

இந்த கொண்டக்கடலையை ஊறவைத்து அவிக்காமல் சாப்பிடுவது உடலுக்கு நேரடியாக சத்துக்களை கிடைக்க உதவி செய்கிறது. சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம் எனவே வேகவைத்தும் எடுத்துக் கொள்ளலாம். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் அதிகரிக்க இது உதவி செய்கிறது. அத்துடன் இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் மட்டும் தான் உள்ளது. அத்துடன் இது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்வதால் தேவையில்லாமல் உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதன் மூலம் எடை குறையும்.

இதில் தேவையான அளவு மெக்னீசியம் நிறைந்துள்ளது, உடலை இது நீரேற்றம் ஆக வைத்திருக்க உதவுகிறது. இதனால் தோள்களில் சுருக்கம், வறட்சி உள்ளிட்டவை இல்லாமல் பார்த்து கொள்ள வழி வகை செய்கிறது. இதில் நிறைய ஆண்டி ஆக்சிடென்டன் மற்றும் பைட்டோநியூட்ரியன்ட்கள் இருப்பதால் இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுண்டலை தொடர்ந்து உணவை சேர்த்து வந்தால் இதயம் தொடர்பான நோய்களை தவிர்க்கலாம். ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த கொண்டக்கடலை மிகவும் உதவியாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கொண்டக்கடலை பயன்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது பால் உற்பத்தி தான். இந்த கொண்டைக்கடலையை நன்றாக சாப்பிட்டு வந்தால் அது பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து குழந்தை பெற்ற தாய்மார்களின் ஆற்றல் குறைவதை தடுக்கவும் அவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது.

Read Previous

புதிய வகை கொரோனா பரவல்.. சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

Read Next

உடல் எடை குறைப்பது சவாலா இருக்கா..? இதை டிரை பன்னுங்க ரொம்ப ஈஸி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular