
நம் அன்றாட வாழ்வில் திருமணமான தம்பதிகள் குழந்தை என்ற ஒரு வரத்தை பெற்றெடுக்க தான் ஆசைப்படுவார்கள். அவ்வாறு சில பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் போதுமான அளவு தாய்ப்பால் இல்லாத காரணத்தால் மன அழுத்திக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். தாய்ப்பால் என்பது அற்புதமான ஒன்று. நம் வயிற்றில் 10 மாதம் சுமந்த அந்த குழந்தைக்கு வயிற்றுக்கு போதுமான அளவு கொடுக்க வேண்டும் என்ற தான் அனைத்து தாய்மார்களும் நினைப்பார்கள். இவ்வாறு நினைக்கும் பட்சத்தில் தனக்கு தாய்ப்பால் போதுமான அளவு இல்லை நம் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பாலை நம்மால் கொடுக்க முடியவில்லை என்று நினைக்கும் போது தாய்மார்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளவார்கள். இந்த வகையில் தாய்ப்பாலை இயற்கை முறையில் அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தாய்ப்பாலை அதிகரிக்க சோம்பு டீ குடிப்பதால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், அதிகமாக தண்ணீர் அருந்துவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இவ்வாறு தண்ணீர் அருந்துவதாலும் தாய்ப்பால் நன்றாக சுரக்குமாம். அதுமட்டுமின்றி, சத்தான காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலமும் ஆரோக்கியமான முறையில் தாய்ப்பாலை அதிகரித்து நாம் குழந்தைக்கு அதிகப்படியான ஆரோக்கியத்தை இதன் மூலம் அளிக்கலாம். மேலும், பூண்டு பால் குடிப்பதன் மூலமும் தாய்ப்பால் அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகள் பாலை அம்மாவிடம் நன்றாக உறிஞ்சி குடிப்பது அவசியமான ஒன்று. ஏனென்றால், இவ்வாறு குடிப்பதால் lactation என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.