
தாய்ப்பால் தானம் அளித்து கின்னஸ் சாதனை..!! குவிந்து வரும் பாராட்டுக்கள்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான அலிஸ் ஓகில்ட்ரீ என்பவர் 2,600க்கும் அதிகமான லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு 1,569 லிட்டர் தாய்ப்பால் வழங்கி சாதனை படைத்த அலிஸ், தற்போது தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார். இவர் அளித்த தாய்ப்பால் மூலம் சுமார் 3.50 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது சாதனைக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.